மாஞ்சோலையில் முகாமிட்ட காட்டு யானைகள்: ஆலய கொட்டகை, மரங்களை சேதப்படுத்தி அட்டகாசம்

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில், குத்தகை காலம் முடியும் முன்பே தனியார் தேயிலை தோட்ட நிறுவனம் மூடப்பட்டதால் அப்பகுதி முழுவதும் வனத்துறை வசமானது.
 சேதம்
Published on: 

நெல்லை,

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு மேற்கு தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து. கோதையாறு மலைக்கிராம பகுதியில் தனியார் தேயிலை தோட்ட நிறுவனம் 99 ஆண்டு கால குத்தகை அடிப்படையில் இயங்கியது.

வனத்துறை

இதற்கிடையே சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில், குத்தகை காலம் முடியும் முன்பே தனியார் தேயிலை தோட்ட நிறுவனம் மூடப்பட்டதால் அப்பகுதி முழுவதும் வனத்துறை வசமானது. அங்கு பணியாற்றிய பெரும்பாலான தொழிலாளர்கள் மலையில் இருந்து இறங்கி, பல்வேறு இடங்களில் மாற்று வேலைக்கு சென்று விட்டனர். எனினும் பல தலைமுறைகளாக மலையில் வசித்த சிலர் இன்னும் அடிப்படை வசதிகளின்றி அங்கேயே வாழ்கின்றனர்.

அங்கிருந்த தொழிற்சாலை, தபால் நிலையம், மருத்துவமனை போன்றவை மூடப்பட்டதால் போதிய வசதிகளின்றி தவிக்கின்றனர். மாஞ்சோலையில் அந்தோணியார் ஆலயம், பிள்ளையார் கோவில், பள்ளிவாசல் போன்ற வழிபாட்டு தலங்கள் உள்ளன. மாஞ்சோலையில் மக்கள் நடமாட்டம் குறைந்த நிலையில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

காட்டு யானைகள்

கடந்த ஒரு வாரமாக மாஞ்சோலையில் 3-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் சுற்றித்திரிகின்றன. இவைகள் அங்குள்ள அந்தோணியார் ஆலயம் முன்புள்ள ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரை கொட்டகையை சாய்த்தன. அங்கு நினைவு சின்னமாக கருதப்படும் கூந்தப்பனையையும் பிடுங்கி மிதித்து சேதப்படுத்தின. மேலும் பிள்ளையார் கோவில் அருகில் இருந்த மரத்தையும் முட்டி சாய்த்தன. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்துடனே வசிக்கின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com