தென்காசி அருகே வயலில் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்: நெற்பயிர்கள் சேதம்

நாற்று நடவு செய்யப்பட்ட நெற்பயிர்களை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தின.
நெற்பயிர்கள் சேதம்
Published on: 

சிவகிரி,

சிவகிரி அருகே வயலில் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசத்தில் ஈடுபட்டன. இதனால் நெற்பயிர்கள் சேதமடைந்தன.

காட்டு யானைகள்

தென்காசி மாவட்டம் கடையநல்லூர், சிவகிரி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகு திகளில் அடிக்கடி காட்டு யானைகள் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துகின்றன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலையில் சிவகிரி அருகே மேற்கு தொடர்ச்சி மலை யில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் ராஜசிங்கப்பேரி கண்மாய், கருப்பசாமி கோவில் வழியாக அங்குள்ள வயல்களில் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டன. நாற்று நடவு செய்யப்பட்ட நெற் பயிர்களை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தின.

நெற்பயிர்கள் சேதம்

இதில் விவசாயிகள் ஜெயராஜ், சிவசாமி, அபர்ணா, பூபதி, கந்தசாமி உள்ளிட்டவர்களுக்கு சொந்தமான சுமார் 5 ஏக்கர் நெற்பயிர்கள் நாசமானது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

எனவே சேதமடைந்த பயிர்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், வனப்பகுதியில் இருந்து வனவிலங்குகள் விளைநிலங்களுக்குள் புகாதவாறு சோலார் மின்வேலி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

X