வால்பாறை-அதிரப்பள்ளி சாலையில் காட்டு யானைகள் உலா: வனத்துறையினர் எச்சரிக்கை

அதிரப்பள்ளி நீர் வீழ்ச்சி பகுதியை ஒட்டிய வனப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவுகிறது.
வால்பாறை-அதிரப்பள்ளி சாலையில் காட்டு யானைகள் உலா: வனத்துறையினர் எச்சரிக்கை
Published on

வால்பாறை,

கேரள மாநிலம் சாலக்குடி செல்லும் வழியில் அதிரப்பள்ளி நீர் வீழ்ச்சி பகுதியை ஒட்டிய வனப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவுகிறது. இதனால் காட்டு யானைகள் குட்டிகளுடன் தண்ணீர் தேடி சாலையை கடந்து ஒரு வனப்பகுதியில் இருந்து மற்றொரு வனப்பகுதிக்கு சென்று வருகிறது.

எனவே வால்பாறையில் இருந்து அதிரப்பள்ளி நீர் வீழ்ச்சிக்கு வாகனங்களில் செல்லும் சுற்றுலா பயணிகள் கவனமாக செல்ல வேண்டும். வழியில் யானைகள் சாலையை கடப்பதை பார்த்தால் யானைகளை தொந்தரவு செய்யவேண்டாம். யானைகள் சாலையை கடந்து செல்லும் வரை காத்திருந்து பின்னர் செல்ல வேண்டும் என்று அதிரப்பள்ளி வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com