காட்டெருமை முட்டி வாலிபர் படுகாயம்

சாணார்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது காட்டெருமை முட்டியதில் வாலிபர் படுகாயம் அடைந்தார்.
காட்டெருமை முட்டி வாலிபர் படுகாயம்
Published on

சாணார்பட்டியை அடுத்த பெருமாள்கோவில்பட்டியை சேர்ந்தவர் சசிதரன் (வயது 29). தனியார் நிறுவன ஊழியர். இவர்,  மோட்டார் சைக்கிளில் அஞ்சுகுளிப்பட்டியில் இருந்து படுகைகாட்டூர் வழியாக பெருமாள்கோவில்பட்டிக்கு மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தார். அப்போது புதருக்குள் மறைந்திருந்த காட்டெருமை திடீரென்று சாலையின் குறுக்கே வந்து மோட்டார் சைக்கிள் மீது முட்டியது. இதில், மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த சசிதரன் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com