சாவு எண்ணிக்கை 22 ஆக உயர்வு

குரங்கணி காட்டுத்தீ விபத்து: தேனி மாவட்டம் குரங்கணி காட்டுப்பகுதியில் கடந்த மாதம் 11-ந் தேதி தீப்பிடித்தது. சாவு எண்ணிக்கை 22 ஆக உயர்வு.
சாவு எண்ணிக்கை 22 ஆக உயர்வு
Published on

மதுரை,

இந்த விபத்தில் மலையேற்ற பயிற்சிக்கு சென்ற 36 பேர் சிக்கிக்கொண்டனர். பலர் உயிருடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 9 பேர் சடலமாக மறுநாள் மீட்கப்பட்டனர்.

தீ விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் மதுரை, சென்னை, கோவை ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களில் 12 பேர் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர்.

இந்த நிலையில் மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சேர்ந்த முருகபூபதி மகள் சிவசங்கரி (வயது 25) என்பவர் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று அதிகாலை இறந்தார்.

இதைத் தொடர்ந்து குரங்கணி தீ விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்தது.

சிவசங்கரிக்கு திருமணம் ஆகவில்லை. கோவையில் பி.இ.(சிவில்) படித்த இவர் அதன் பின்னர் மதுரையில் எம்.இ. படித்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை சென்ற அவர் ஆழ்வார் பேட்டையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஜூனியர் என்ஜி னீயராக பணியாற்றி வந்தார்.

சிவசங்கரியின் உடல் நேற்று பிற்பகல் உடுமலை காந்தி நகரில் உள்ள அவர்களது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடலை பார்த்து குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதனர். பின்னர் மாலையில் உடுமலை-பொள்ளாச்சி சாலையில் உள்ள மின் மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்ட சிவசங்கரியின் உடல் அங்கு தகனம் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com