வன உயிரின விழிப்புணர்வு நிகழ்ச்சி

முதுமலை தெப்பக்காடு வரவேற்பு மையத்தில் வன உயிரின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
வன உயிரின விழிப்புணர்வு நிகழ்ச்சி
Published on

முதுமலை புலிகள் காப்பக தெப்பக்காடு வரவேற்பு சரகம் சார்பில், வன உயிரின வார விழாவையொட்டி வரவேற்பு மையத்தில் பார்வையாளர்கள் முன்பு தெரு நிகழ்ச்சி (ஸ்ட்ரீட் ஷோ) நடைபெற்றது. நிகழ்ச்சியில் வனச்சரகர்கள் சதாம் உசேன், விஜய் கலந்துகொண்டனர். இதில் கார்குடி பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு விலங்குகளை போல தத்ரூபமாக வேடமிட்டு நடனமாடினர். பின்னர் வனவிலங்கு பாதுகாப்பின் அவசியம் குறித்து நாடகமாக நடித்து சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியை பார்த்து பார்வையாளர்கள் முதுமலை புலிகள் காப்பக ஊழியர்களையும், கார்குடி பள்ளி குழந்தைகளையும் பாராட்டி சென்றனர். தொடர்ந்து யூடியூப் சேனல் கணக்கை தொடங்கி இதுபோல விழிப்புணர்வு நாடகங்களை பதிவேற்றம் செய்யுமாறு வனத்துறையினர் கேட்டுக்கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com