எத்தனை தடை வந்தாலும், சூழ்ச்சிகள் செய்தாலும் தொண்டர்கள் ஆதரவுடன் அதனை எதிர்கொள்வோம்: முதல் அமைச்சர் பழனிசாமி

எத்தனை தடை வந்தாலும், சூழ்ச்சிகள் செய்தாலும் தொண்டர்கள் ஆதரவுடன் அதனை எதிர்கொள்வோம் என்று முதல் அமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
எத்தனை தடை வந்தாலும், சூழ்ச்சிகள் செய்தாலும் தொண்டர்கள் ஆதரவுடன் அதனை எதிர்கொள்வோம்: முதல் அமைச்சர் பழனிசாமி
Published on

சேலம்,

முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சேலத்தில் உரையாற்றினார். அவர் பேசியதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

ஜெயலலிதா ஆசியுடன் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள். உள்ளாட்சி தேர்தலில் தொண்டர்கள் மிகப்பெரும் வெற்றியை தேடி தரவேண்டும். ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்க தினம் தோறும் ஏதாவது செய்து வருகின்றனர். பட்ஜெட் கூட்டத்தொடர் வெற்றிகரமாக நடக்காது என்றார்கள், ஆனால், அதை வெற்றிகரமாக நடத்திக்காட்டினோம்.

எம்.ஜி.ஆர் ஜெயலலிதா ஆசி இருக்கும் வரை இந்த ஆட்சியையும் கட்சியையும் ஒன்றும் செய்ய முடியாது. அதிமுகவில் அடிமட்ட தொண்டனும் முதல் அமைச்சராக முடியும். நான் சாதாரண பழனிசாமி, ஜெயலலிதாவால் முதல் அமைச்சர் ஆனேன். இரட்டை இலை சின்னம் விரைவில் மீட்கப்படும். எத்தனை தடை வந்தாலும், சூழ்ச்சிகள் செய்தாலும் தொண்டர்கள் ஆதரவுடன் அதனை எதிர்கொள்வோம் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com