அரசு கேபிளில் 3 தனியார் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு நிறுத்தமா? - தமிழக அரசு விளக்கம்

சில செட் ஆப் பாக்ஸ்களில் மட்டும் 3 தனியார் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு செய்ய இயலவில்லை.
அரசு கேபிளில் 3 தனியார் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு நிறுத்தமா? - தமிழக அரசு விளக்கம்
Published on

சென்னை,

தமிழ்நாடு அரசு கேபிள் ஒளிபரப்பில் இருந்து 3 தனியார் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதாக தகவல்கள் பரவின. இதற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின், அண்ணாமலை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பா.ம.க. தலைவர் அன்புமணி உள்பட பல அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.

இது குறித்து தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாடு அரசு கேபிள் ஒளிபரப்பில் இருந்து 3 தனியார் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு நீக்கப்பட்டுள்ளதாக வரும் செய்திகள் தவறானது. இந்த 3 சேனல்களும் தொழில் நுட்ப பிரச்சினைகள் காரணத்தால் தற்காலிகமாக சில செட் ஆப் பாக்ஸ்களில் மட்டும் ஒளிபரப்பு செய்ய இயலவில்லை.

இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட தொலைக்காட்சிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. செட் ஆப் பாக்ஸ் நிறுவனத்திற்கு வைத்திருக்கும் நிலுவை தொகை காரணமாக ஒளிபரப்பு தடை ஏற்பட்டுள்ளது என்பது தவறான தகவலாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com