பச்சை தேயிலைக்கு உரிய விலை நிர்ணயிக்கப்படுமா? - விவசாயிகள் எதிர்பார்ப்பு

மிதமான குளிர் மற்றும் பரவலான மழைப்பொழிவு தேயிலைக்கு ஏற்றதாக உள்ளது.
பச்சை தேயிலைக்கு உரிய விலை நிர்ணயிக்கப்படுமா? - விவசாயிகள் எதிர்பார்ப்பு
Published on

ஊட்டி,

பச்சை தேயிலை

மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சியிலும், மக்களின் வாழ்வாதாரத்திலும் தேயிலை விவசாயம் முக்கிய பங்கு வகிக்கிறது. 1830-ம் ஆண்டு காலகட்டத்தில் சோதனை முறையில் ஆங்கிலேயர்களால் தேயிலை நடவு செய்யப்பட்டது. ஆண்டு முழுவதும் நிலவும் மிதமான குளிர் மற்றும் பரவலான மழைப்பொழிவு தேயிலைக்கு ஏற்றதாக உள்ளது.

நீலகிரியில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு தேயிலை விவசாயிகள் உள்ள நிலையில், கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பச்சை தேயிலைக்கு நியாயமான விலை கிடைக்காததால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் தேயிலை விவசாயத்துக்கு பதிலாக மாற்றுப் பயிர்களை பயிரிடும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

பொருளாதார நெருக்கடி

பச்சை தேயிலைக்கு நியாயமான விலை வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், தீர்வு ஏற்படவில்லை. இந்த நிலையில் பச்சை தேயிலை கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ.15.50 வரை மட்டுமே கிடைப்பதால் தோட்டங்களில் பராமரிப்பு உள்பட பல்வேறு செலவினங்களை ஈடுசெய்ய முடியாமல் விவசாயிகள் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகி வருகின்றனர்.

இதனால் கிலோவுக்கு ரூ.35 வரை விலை நிர்ணயம் செய்து வழங்கினால் மட்டுமே தேயிலை விவசாயிக ளுக்கு வருவாய் ஈட்ட முடியும். இதனால் தமிழக அரசு நீலகிரி மாவட்ட தேயிலை விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்த்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.15 வரை மட்டுமே வழங்கப்படுகிறது. ஒரு மூட்டை உரம் ரூ.2,500-க்கு மேல் விற்கப்படுகிறது. இதுதவிர தொழிலாளர்கள் சம்பளம் உள்ளிட்ட செலவினங்களை கணக் கீடும்போது நஷ்டத்தை சந்திக்க வேண்டிய நிலை தொடர் கிறது. இதனால் படிப்படியாக தேயிலை விவசாயத்துக்கு பதிலாக மாற்றுப் பயிர்களை பயிரிடும் முடிவுக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே, நீலகிரி விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு பச்சை தேயிலைக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com