தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படுமா? எடப்பாடி பழனிசாமி பதில்

தவெக ஆட்சிக்கு வந்ததில் இருந்து இன்று வரை, கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது. இந்த அரசு கும்பகர்ண தூக்கத்தில் இருக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
எடப்பாடி பழனிசாமி
Published on: 

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: நான் ஏற்கனவே பலமுறை சொல்லிவிட்டேன். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து உள்ளது. முதல் அமைச்சர் விஜய் இதில் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.இந்த அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து இன்று வரை, கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது. இந்த அரசு கும்பகர்ண தூக்கத்தில் இருக்கிறது.

பலமுறை தட்டி எழுப்பினாலும் எழுந்த பாடில்லை. திராணியற்ற அரசு என்ற காரணத்தினால், சட்டம் ஒழுங்கு மிக மோசமான சூழ்நிலையில் இருக்கிறது” என்றார். தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படுமா? என்று கேட்கிறீர்கள். நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்து செங்கோட்டையன் பேசுவது அது அவருடைய கருத்து . சில விஷயங்களை பொது வெளியில் பேச முடியாது. அப்படி ஒரு சூழல் வரும் போது அனைத்து ஊடக நண்பர்களையும் அழைத்து சொல்வோம்” என்றார்.

X