

அரியலூர் மாவட்டம், திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் கீழப்பழுவூர் முதல் விளாங்குடி கைக்காட்டி வரையிலும் 15 கிலோ மீட்டர் தொலைவுக்கு நகரப் பஸ்கள் எவையும் இதுவரை இயக்கப் படவில்லை.இதனால் இம்மார்க்கத்தில் செல்லும் நீண்டதூர விரைவுப் பஸ்களையே பயணிகள் நம்பி உள்ளனர். இதனால் தஞ்சை, அரியலூர், ஜெயங்கொண்டம் போன்ற ஊர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே கீழப்பழுவூர்-விளாங்குடி கைக்காட்டி வரை நகரப் பஸ்கள் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.