திருச்சி கிழக்கில் காங்கிரஸ் போட்டியா?-அமைச்சர் பதில்

முதல்-அமைச்சர் விஜய் நின்று வெற்றி பெற்ற தொகுதி என்பதால் திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் தவெகவே நேரடியாக போட்டியிடும் என அமைச்சர் ராஜேஷ்குமார் தெரிவித்தார்.
சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார்
Published on

சென்னை,

பெரம்பூர், திருச்சி கிழக்கு என 2 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், அதில் திருச்சி கிழக்கு தொகுதியை முதல்-அமைச்சர் விஜய் ராஜினாமா செய்தார். இதனால், அந்த தொகுதி காலி என அறிவிக்கப்பட்டு உள்ளது.

ராஜினாமா

இதனை தொடர்ந்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா மற்றும் இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்தனர். இதனால், திருச்சி கிழக்கு மற்றும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்த நான்கு தொகுதிகளும் என மொத்தம் தமிழ்நாட்டில் ஐந்து தொகுதிகள் காலியாக உள்ளன.

கேள்விகள் எழுந்து வருகின்றன

விரைவில் இந்த ஐந்து தொகுதிகளுக்கு தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் அறிவிக்கும் எனும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்தச் சூழலில், முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கில் ஆளும் கட்சி சார்பில் தவெகவே நேரடியாக போட்டியிடுமா அல்லது கூட்டணி கட்சிகளின் வசம் ஒப்படைக்கப்படுமா எனும் கேள்விகள் எழுந்து வருகின்றன.

அமைச்சர் ராஜேஷ்குமார்

இந்த நிலையில் கன்னியாகுமரியில் செய்தியாளர்களை சந்தித்த சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் கூறியதாவது:-முதலமைச்சர் விஜய் நின்று வெற்றி பெற்ற தொகுதி என்பதால் திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் தவெகவே நேரடியாக போட்டியிடும் என தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com