

சென்னை
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வருகிறது .வேகமாக பரவி வரும் தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு ,இரவு நேர ஊரடங்கு ,ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகளை விதித்துள்ளது
.
எனினும் தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. இன்றைய கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை கடந்தது .
இந்நிலையில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து நாளை மறுநாள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
. கொரோனா பாதிப்பு அதிகமாகி வருவதால் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.