தவெகவில் இணைகிறேனா.? - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம்

சட்டசபை தேர்தலுக்கு பின்னர் அதிமுகவை சேர்ந்தவர்கள் சிலர் தவெகவில் இணைந்து வருகின்றனர்.
தவெகவில் இணைகிறேனா.? - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம்
Published on

சென்னை,

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைய உள்ளதாக தகவல்கள் பரவின.

நடந்த முடிந்த சட்டசபை தேர்தலுக்கு பின்னர் அதிமுகவை சேர்ந்தவர்கள் சிலர் தவெகவில் இணைந்து வருகின்றனர். அதில் முக்கியமாக அதிமுகவை சேர்ந்த மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார், தாராபுரம் எம்எல்ஏ சத்தியபாமா மற்றும் அம்பாசமுத்திரம் எம்.எல்.ஏ., இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.

செல்லூர் ராஜூ

அந்த வகையில், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவும் கட்சியில் இருந்து விலகி தவெகவில் இணைய உள்ளதாக தகவல்கள் பரவின. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக செல்லூர் ராஜூ தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்து இருப்பதாவது;

”ஏப்பா, ஏய்! எத்தனை கட்சியிலப்பா சேர்ப்பீங்க. நான் என்றும் புரட்சித்தலைவர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் தான். புரட்சித் தலைவர் ஏழைகளின் நன்மைக்காக உருவாக்கிய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தான் என் வழி.”

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com