தமிழகத்தில் மதுபானங்கள் விலை உயருகிறது?... இன்று அல்லது நாளை அறிவிப்பு

நாளொன்​றுக்கு சராசரி​யாக ரூ.150 கோடிக்கு மது விற்​பனை நடை​பெறுகிறது.
தமிழகத்தில் மதுபானங்கள் விலை உயருகிறது?... இன்று அல்லது நாளை அறிவிப்பு
Published on

சென்னை,

டாஸ்​மாக்

தமிழகத்​தில் தற்​போது 4.048 டாஸ்​மாக் கடைகள் செயல்​பட்டு வரு​கின்​றன. இந்த கடைகளில் நாளொன்​றுக்கு சராசரி​யாக ரூ.150 கோடிக்கு மது விற்​பனை நடை​பெறுகிறது. இந்த கடைகளில் விஸ்​கி, பிராந்​தி, வோட்​கா, ரம் போன்ற இந்​திய தயாரிப்பு வெளி​நாட்டு வகை மது​பானங்​கள், பீர், ஒயின் உள்ளிட்ட மது​பானங்​கள் விற்​பனை செய்​யப்​படு​கின்​றன.

மது​பான விலை உயர்வு

இந்​நிலை​யில் டாஸ்​மாக் கடைகளில் விற்​பனை செய்​யப்படும் மது​பானங்​களின் விலையை உயர்த்த டாஸ்​மாக் நிர்​வாகம் திட்​ட​மிட்​டுள்​ளது. அதன்​படி, சாதாரண மற்​றும் நடுத்தர வகை வெளி​நாட்டு மது​பானங்​கள் மற்​றும் பீர் உள்​ளிட்​ட​வற்​றின் விலையை ரூ.10 முதல் ரூ.50 வரை உயர்த்த திட்டமிடப்பட்​டுள்​ளது. இது அண்மையில் நடந்த டாஸ்​மாக் நிர்​வாகத்​தின் வாரிய கூட்​டத்​தில் விவாதிக்​கப்​பட்​டுள்​ளது.

இருப்​பினும், இறுதி முடிவு எடுக்​கப்​பட​வில்லை. மேலும் எவ்வளவு உயர்த்த வேண்டும் என்ற உயர்​வின் அளவு இன்​னும் இறுதி செய்​யப்​பட​வில்​லை. தமிழகத்​தில் கடைசி​யாக கடந்த 2024 பிப்​ர​வரி 1-ம் தேதி மதுபான விலை உயர்த்​தப்​பட்​டது குறிப்​பிடத்​தக்​கது.

கூடு​தல் கட்​ட​ணம்

இது குறித்து டாஸ்​மாக் அதி​காரி​கள் கூறிய​தாவது: தமிழகத்​தில் தவெக அரசு பொறுப்​பேற்​றவுடன், இந்​திய தயாரிப்பு வெளி​நாட்டு மது​பானங்​கள் மற்​றும் பீர் தயாரிக்​கும் நிறு​வனங்​களுக்கு உற்​பத்தி செய்​யப்​படும் ஒவ்​வொரு பெட்​டிக்​கும் கூடு​தல் கட்​ட​ணம் நிர்​ன​யித்​தது. இதனால் உற்​பத்தி மற்​றும் விநி​யோகச் செல​வு​கள் அதி​கரித்​துள்​ள​தாகக் கூறி, மது​பான ஆலை மற்​றும் பீர் உற்​பத்​தி​யாளர்​கள் சில்​லறை விலையை உயர்த்​து​மாறு அரசிடம் கோரிக்கை வைத்​தனர். ஆனால் இதை அரசு உடனடியாக ஏற்​க​வில்லை என்​றாலும், இந்த விவ​காரம் டாஸ்​மாக் நிர்​வாகக் குழுக் கூட்​டத்​தில் விவாதிக்​கப்​பட்​டது.

இன்று அல்​லது நாளை...

எதிர்​காலத்​தில் டாஸ்​மாக் சில்​லறை மது​பான விற்​பனையை தனி​யார் நிறு​வனங்​களிடம் ஒப்படைக்கும் வாய்ப்பு குறித்​தும் கூட்​டத்​தில் ஆலோ​சிக்​கப்​பட்​டது. ஆனால், இதற்கு நிதித்​துறை ஆதரவு அளிக்​க​வில்​லை. தனி​யாருக்கு விற்​பனை உரிமை வழங்​கப்​பட்​டால், மாநில அரசின் மது​பான வரு​வாய் பாதிக்​கப்​படும் என நிதித்​துறை தரப்​பில் முன்​வைக்​கப்​பட்​டது. இந்த விலை உயர்வு குறித்து இன்று அல்​லது நாளை மீண்​டும் உயர்​மட்ட ஆலோ​சனை நடத்தி அறி​விப்பு வெளி​யிடப்​படலாம். அடுத்த வாரத்தில் புதி​ய விலை அமல்படுத்​தப்​படலாம். இவ்​வாறு அவர்​கள்​ கூறினர்​.

X

Daily Thanthi
www.dailythanthi.com