பயிர்களுக்கு வருண பகவான் கருணை காட்டுவாரா?

நிலக்கோட்டை பகுதியில் பயிர்களுக்கு வருண பகவான் கருணை காட்டுவாரா என்று விவசாயிகள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
பயிர்களுக்கு வருண பகவான் கருணை காட்டுவாரா?
Published on

நிலக்கோட்டை பகுதியில் உள்ள, சீத்தாபுரம், விராலிப்பட்டி, என்.ஊத்துப்பட்டி, மிளகாய் பட்டி, என்.ஆண்டிபட்டி, கோடாங்கிநாயக்கன்பட்டி, கோட்டூர், பிள்ளையார்நத்தம், குளத்துப்பட்டி, வீலிநாயக்கன்பட்டி, கரட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் மானாவாரி பயிர்களான கம்பு, சோளம், உளுந்து, துவரை, சோளம் உள்ளிட்ட பல்வேறு பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்தனர். தற்போது நிலக்கோட்டை பகுதியில் உள்ள வயல்களில் பச்சை பசேல் என கண்ணுக்கு குளிர்ச்சியாக பயிர்கள் வளர்ந்து காட்சி அளிக்கிறது. ஆனால் கடந்த 20 நாட்களுக்கு மேலாக இப்பகுதியில் மழை பெய்யாததால் பயிர்கள் விளைவதற்கு போதிய தண்ணீர் இல்லாமல் வாடி வருகிறது. மானாவாரி பயிர்கள் வளருவதற்கு வருண பகவான் கருணை காட்ட வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com