மதுரை எய்ம்ஸ் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறுமா? - நிர்வாகக்குழு இன்று முக்கிய ஆலோசனை

மதுரை எய்ம்ஸ் மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பாக நிர்வாகக்குழு இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

விருதுநகர்,

மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்டுமானப்பணி தொடங்கப்படாத நிலையில் ஆஸ்பத்திரியில் 17 பேரை உறுப்பினர்களாக கொண்ட நிர்வாகக்குழு, ஜிப்மர் தலைவர் டாக்டர் பி.எம். கட்டோச் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிர்வாக குழு கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் 2021-22-ம் கல்வி ஆண்டில் மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை பற்றியும், அதற்கான பேராசிரியர்கள் மற்றும் பிற பணியாளர்கள் நியமனம், மாணவர்களுக்கான விடுதி வசதி, போக்குவரத்து வசதி மற்றும் திட்ட மேலாண்மை ஆலோசகர் ஒப்பந்தம் ஆகியவை பற்றியும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com