மதுரை கிரானைட் குவாரி மீண்டும் திறப்பா..? - அமைச்சர் துரைமுருகன் விளக்கம்

கிரானைட் குவாரி தொழிலை மீண்டும் நடத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என, அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
மதுரை கிரானைட் குவாரி மீண்டும் திறப்பா..? - அமைச்சர் துரைமுருகன் விளக்கம்
Published on

மதுரை,

மதுரை மாவட்டத்தில் கிரானைட் குவாரி தொழிலை மீண்டும் நடத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என, நீர்வளம் மற்றும் கனிமவளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இது தொடர்பாக அதிமுக உறுப்பினர் ஆர்.பி. உதயகுமார் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். அப்போது, இதற்கு பதிலளித்த பேசிய அமைச்சர் துரைமுருகன், கடந்த 2014ஆம் ஆண்டு மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த சகாயம், கிரானைட் குவாரிகளில் சட்ட விதி மீறல்கள் நடைபெற்றதால், அரசுக்கு ஒரு லட்சத்து13 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக கூறி, அறிக்கை அளித்ததை சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில், அழிந்து போன குவாரி தொழில் மீண்டும் செழிக்கவும், இதனால் வேலை வாய்ப்பு பெருகவும் அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com