எனது கனவை மு.க.ஸ்டாலின் நிறைவேற்றுவாரா? - சி.வி.சண்முகம்

திமுக அரசின் கனவை சொல்லுங்கள் திட்டத்தை விமர்சித்து சி.வி.சண்முகம் பேசியுள்ளார்.
எனது கனவை மு.க.ஸ்டாலின் நிறைவேற்றுவாரா? - சி.வி.சண்முகம்
Published on

விழுப்புரம்,

திமுக அரசை கண்டித்து இன்று விழுப்புரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

திமுக அரசின் கனவை சொல்லுங்கள் திட்டம் குறித்து விமர்சித்து பேசுகையில், இவ்வளவு நாட்கள் ஆட்சியில் இருந்தபோது மக்களுக்கு எதுவும் செய்யாமல் ஆட்சி முடியும் நேரத்தில் உங்கள் கனவை சொல்லுங்கள் நாங்கள் நிறைவேற்றி தருகிறோம் என்று கூறி வருகிறார்.எனக்கு நயன்தாரா வேண்டும் என்று ஆசை இருக்கிறது, எனது கனவை ஸ்டாலின் நிறைவேற்றுவாரா?

ஆட்சி முடியும் நேரத்தில் பேசிவரும் மு.க. ஸ்டாலின் ஐந்து ஆண்டு கால ஆட்சியில் எங்கே சென்றார் என்று தெரியவில்லை. கடந்த ஐந்து ஆண்டு காலமாக எதுவும் செய்யாமல் தற்போது விளம்பரத்திற்காக நடக்கிறார், ஓடுகிறார், சைக்கிள், பைக், கார் எல்லாம் ஓட்டுகிறார். இன்னும் ராக்கெட் மட்டும் தான் ஓட்ட வில்லை அதுவும் இந்த முறை நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலோடு ராக்கெட்டில் அனுப்பி வைத்து விடுவோம். இதன் பின்பு திமுக ஆட்சிக்கு வரப்போவதில்லை.

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com