பெரியார் நூலகத்திற்கு உரிமை கொண்டாடிய தி.மு.க. ஊழலுக்கும் பொறுப்பேற்பார்களா? - தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி

தமிழக அரசு பாரபட்சம் பார்க்காமல் தவறு செய்தவர்களை தண்டிக்க வேண்டும் என தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.
பெரியார் நூலகத்திற்கு உரிமை கொண்டாடிய தி.மு.க. ஊழலுக்கும் பொறுப்பேற்பார்களா? - தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி
Published on: 

சென்னை,

பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

“சென்ற தி.மு.க. அரசு, கோவை பெரியார் அறிவுலகம் எழுப்பியதற்கு முழு சொந்தம் கொண்டாடினார்கள். ஒரு ஆட்சி மாறி அடுத்த ஆட்சியில் திட்டங்களை அடுத்து ஆட்சி திறந்து வைப்பது இயற்கைதான். ஆனால் அதைசற்றும் பொறுத்துக் கொள்ளாமல் முழு உரிமையும் தங்களுக்குத்தான் என்றும், அந்த நூலகத்தில் ஒவ்வொரு நகர்வையும் தனிப்பட்ட முறையில் நான் சரி பார்த்தேன் என்று சொன்ன முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி கொடுத்து கொண்டு இருக்கும்போதே பின்னால் கொள்ளையடிப்பது கொள்கை என்று குற்றம் சாட்டப்பட்ட செந்தில் பாலாஜி, நேரு, எ.வ.வேலு போன்றவர்கள் நின்று கொண்டு இருந்ததை பார்த்தால் எதை எண்ணினார்கள் எதை சரி பார்த்தார்கள் என்றே கேள்வி கேட்க தோன்றுகிறது.

படிப்பதிலும் ஊழல்...

குடிப்பதை ஊக்குவித்து பாட்டிலுக்கு பத்து ரூபாய் என்று ஊழல் செய்தவர்கள் இன்று படிப்பதிலும் புத்தகம் வாங்குவதிலும் ஊழல் செய்திருக்கிறார்கள் என்பது மன்னிக்க முடியாத குற்றம் இது ஒரு அறிவு திருட்டு என்பது மட்டுமல்ல இந்த தவறான போலி ஏ.ஐ. நூல்களை வருங்கால சந்ததியினர் படித்திருந்தார்கள் என்றால், பெரியார் அறிவு நூலகம் என்று இவர்கள் பெயர் வைத்தது, பெரியார் அறம் இல்லாத நூலகமாக மாறிக்கொண்டிருந்திருக்கிறது.

பொறுப்பேற்பார்களா?

இதற்கு முன்னால் ஊழலில் மக்களின் அடிமடியில்தான் கை வைத்துக் கொண்டு இருந்தார்கள் இன்று குழந்தைகளின் அறிவிலேயே கையை வைக்க ஆரம்பித்துவிட்டார்கள். என்ன கொடுமை இது? எந்த உலகத்திலும் நடக்காத ஒன்று. பெரியார் அறிவு நூலகத்திற்கு உரிமை கொண்டாடிய தி.மு.க. இந்த ஊழலுக்கும் உரிமை கொண்டாடுவார்களா? பொறுப்பேற்பார்களா?

அதே நேரத்தில் இந்த அரசு பாரபட்சம் பார்க்காமல் இந்த அறிவுத்திருட்டை உடனே கண்டுபிடித்து, தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அத்தனை நூல்களையும் எழுத்தாளர்கள் குழு கொண்டு மாற்றி அமைக்க வேண்டும். ஆக ஊருக்கு ஒரு நூலகம் ஊழலுக்காக தானா?”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

X