தரிசாக கிடக்கும் வயல்கள் புத்துயிர் பெற வருண பகவான் கருணை கிடைக்குமா? - விவசாயிகள் எதிர்பார்ப்பு

டெல்டா மாவட்டங்களில் முழுமையாக குறுவை சாகுபடி செய்ய இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
தரிசாக கிடக்கும் வயல்கள் புத்துயிர் பெற வருண பகவான் கருணை கிடைக்குமா? - விவசாயிகள் எதிர்பார்ப்பு
Published on

தஞ்சாவூர்,

மேட்டூர் அணை திறக்கவில்லை

காவிரி பாசன பகுதிகளுக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் குறிப்பிட்ட ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட வில்லை. மேட்டூர் அணையின் நீர் இருப்பு மற்றும் நீர்வரத்து திருப்திகரமாக இல்லாததால் மேட்டூர் அணை தண்ணீர் திறக்கப்படவில்லை. காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளின் படி கர்நாடக அரசு தமிழகத்துக்கு தரவேண்டிய தண்ணீரை வழங்கவில்லை.

காவிரி டெல்டா மாவட்டங்களில் முழுமையாக குறுவை சாகுபடி செய்ய இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆழ்துளை கிணறு வசதி உள்ள விவசாயிகள் மட்டுமே குறுவை சாகுபடி மேற்கொண்டு அறுவடை செய்து வருகின்றனர். இயல்பாக மேட்டூர் அணை திறக்கப்பட்டு கால்வாய்களில் தண்ணீர் வந்து குறுவை சாகுபடி மேற்கொள்ளப்படும் வயல்கள் தரிசாக கிடக்கின்றன.

நீர்வரத்து குறைவு

டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி இல்லாததால் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் ஒருபோக சாகுப டிக்காக தண்ணீர் வருமா என்று ஏக்கத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். டெல்டா மாவட்ட விவசாயிகளின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப கடந்த சில நாட்களாக கர்நாடக அணை களில் இருந்து திறக்கப்பட்டதாக கூறப்படும் உபரி நீர் மேட் டூர் அணைக்கு வந்து சேர்ந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்தது. இருப்பினும் அணைக்கு வரும் நீர்வரத்தானது குறைந்துள்ளது.

வருணபகவான் கருணை கிடைக்குமா?

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகமானது என்ற செய்தி வந்ததில் இருந்து டெல்டா விவசாயிகள் மத்தியில் ஒரு நம்பிக்கை ஏற்பட்டது. அந்த நம்பிக்கை கர்நாடகா அரசு இன்னமும் உபரி நீரை மட்டுமே தமிழகத்துக்கு தருகிறது. உரிமை நீரை தருவதற்கு மனமில்லை என்று பாசனபகுதி விவசாயிகள் கவலையோடு கூறுகிறார்கள். வானிலை ஆய்வாளர்கள் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவித்து வரும் நிலையில், மேட்டூர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை கொட்டித்தீர்த்து வருண பகவான் கருணை கிடைக்குமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com