

தவெக அமைச்சரவையில் இடம்பெறுமாறு விசிக மற்றும் ஐயூஎம்எல் கட்சிகளுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி,யின் தலைவர் காதர் மொகீதின் கூறியதாவது: இன்று மாலை அல்லது நாளை கட்சியின் உயர்மட்ட குழுவை கூட்டி இது குறித்து ஆலோசித்து முடிவெடுப்போம்”என்று தெரிவித்துள்ளார்
முன்னதாக திருமாவளவனும் இதே கருத்தை தெரிவித்தார். திருமாவளவன் கூறியதாவது: அமைச்சரவையில் இடம்பெறுமாறு ஆதவ் அர்ஜுனா விடுத்த அழைப்புக்கு நன்றி தெரிவிக்கிறேன். கடந்த 8 ஆம் தேதி எங்கள் கட்சியின் உயர்நிலைக்குழு கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள், ஆட்சியில் பங்குபெற வேண்டும் என்று வலியுறுத்தினர்.
ஆனாலும், நான் எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்படுவதாக கூறினார்கள். அதன்பின் விசிக பொதுச்செயலாளர்களுடன் கலந்து பேசி, நிபந்தனையற்ற ஆதரவை வழங்கினோம்.பதவியேற்புக்கு பின்னர் எங்கள் அலுவலகம் வந்த முதல்வர் விஜய் அமைச்சரவையில் இணையுமாறு வலியுறுத்தினார். அதனை மீண்டும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வழிமொழிந்துள்ளார். இதுகுறித்து எங்கள் முன்னணி பொறுப்பாளர்களுடன் கலந்துபேசி முடிவை அறிப்போம்” என்றார்.