பல லட்சம் பேர் எழுதக்கூடிய குரூப்-4 தேர்வு அறிவிப்பு இன்று வெளியாகிறது?

பல லட்சம் பேர் எழுதக்கூடிய குரூப்-4 பணியிடங்களுக்கு இன்று வெளியிடப்படுவதாக தெரிகிறது.

பல லட்சம் பேர் எழுதக்கூடிய குரூப்-4 தேர்வு அறிவிப்பு இன்று வெளியாகிறது?
Published on: 

சென்னை,

குரூப்-4 பணியிடங்களுக்கான அறிவிப்பு இன்றோ (செவ்வாய்க்கிழமை) அல்லது இந்த வார இறுதிக்குள்ளோ வெளியாகலாம் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

தேர்வு அட்டவணை

தமிழ்நாடு அரசு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவிப்புகளை வெளியிட்டு அதன்படி தேர்வுகளை நடத்தி வருகிறது. குரூப்-1, 2 ஏ, 3, 4, 5 என பல்வேறு பதவிகளுக்கு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் 2026-ம் ஆண்டில் எந்தெந்த மாதங்களில் எந்த பணியிடங்களுக்கு அறிவிப்புகள் வெளியாகும் என்பது குறித்த அட்டவணை வெளியிடப்பட்டு இருந்தது. அந்த அட்டவணையில் கூறியிருந்த படி இதுவரை குரூப்- 1, 2ஏ உள்ளிட்ட சில பதவிகளுக்கு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு சில பதவிகளுக்கு தேர்வுகளும் நடத்தப்பட்டு இருக்கின்றன.

குரூப்-4 பணியிடங்கள்

அந்த வரிசையில் ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் பேர் எதிர்பார்த்து காத்திருக்கும் குரூப்- 4 பணியிடங்களுக்கு இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் அறிவிப்பு வெளியாகும் என ஆண்டு அட்டவணையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் அக்டோபர் மாதம் தொடங்கிய சூழலில் எப்போது அறிவிப்பு வெளியிடப்படும் என்ற எதிர்பார்ப்பில் குரூப்-4 தேர்வர்கள் ஆவலோடு காத்தி ருக்கின்றனர்.

இதற்கிடையில் குரூப்-4 பணியிடங்களுக்கான அறிவிப்பு இன்றோ (செவ்வாய்க்கிழமை) அல்லது இந்த வார இறுதிக்குள்ளோ வெளியாகலாம் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த ஆண்டு குரூப்-4 பதவிகளில் 5 ஆயிரத்து 307 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியானது. இதற்கான எழுத்து தேர்வு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 12-ந் தேதி நடந்தது. இந்த தேர்வை எழுத 13 லட்சத்து 89 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்ததில் 11 லட்சத்து 48 ஆயிரம் பேர் எழுதி இருந்தார்கள்.

10 ஆயிரம் இடங்கள்

இந்தநிலையில் நடப்பாண்டில் சுமார் 10 ஆயிரம் காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகலாம் என்றும், அதற்கு சுமார் 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பிக்க வாய்ப்பு இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com