சிலிண்டர் விலை உயர்வால் டீ, காபி விலையும் அதிகரிக்குமா? டீக்கடை உரிமையாளர்கள் சங்கம் விளக்கம்

சென்னையில் கடந்த ஆகஸ்ட் மாதம்தான் டீ, காபி விலை முறையே ரூ.15 மற்றும் 20 ஆகவும் உயர்த்தபடுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
சிலிண்டர் விலை உயர்வால் டீ, காபி விலையும் அதிகரிக்குமா? டீக்கடை உரிமையாளர்கள் சங்கம் விளக்கம்
Published on

சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் போர் பதற்றங்கள் காரணமாக, இந்தியாவில் வணிக பயன்பாட்டிற்கான சமையல் கியாஸ் சிலிண்டர் ரூ.115 அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை ஏற்றத்தால் உணவகங்கள் மற்றும் டீக்கடைகளில் பாதிப்பு ஏற்பட்டாலும், பொதுமக்களின் நலன் கருதி டீ மற்றும் காபி விலையை உயர்த்தப் போவதில்லை.

பொதுமக்கள் மீதான சுமையைக் குறைக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடை உரிமையாளர்கள் தரத்தை பராமரித்து, அதற்குப் பிறகுதான் விலை உயர்வு பற்றி யோசிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று பெருநகர டீக்கடை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com