அரசு பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீடு 10 சதவீதமாக உயர்த்தப்படுமா? அமைச்சர் அருண்ராஜ் பதில்

மருத்துவப் படிப்புக்கான கட்டணங்களை அதிகமாக கல்வி நிறுவனங்கள் பெறுவதாக புகார்கள் வருகின்றன.
அருண்ராஜ்
Published on

சென்னை,

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை சட்டசபை யில் நிறைவேற்றியுள்ளோம். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான விருது பெறுவதற்காக நான் டெல்லி சென்றிருந்த போது கூட மத்திய சுகாதாரத்துறை மந்திரியை சந்தித்து கோரிக்கை வைத்ததில் கூட நீட் குறித்தும் கோரிக்கை வைத்தோம். அரசு சார்பிலும், சட்டப்போராட்டத்திலும் நாம் அதை முன்வைக்கிறோம்.

கூடுதல் மருத்துவ இடங்கள்

நிச்சயமாக நம்முடைய மாநில உரிமையை பெற்றுக்கொள்வோம்.அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டை 10 சத வீதமாக உயர்த்துவது தொடர்பாக முதல்-அமைச்சருடன் பேசி குழு அமைத்து அந்த குழு எப்படி சொல்கிறார்களோ? அதன்படி செய்வோம். 5 கல்லூரிகளுக்கு கூடுதல் மருத்துவ இடங்கள் கிடைத்திருக்கிறது.

சட்டப்படி நடவடிக்கை

இன்னும் தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் அதற்கான ஆய்வை நடத்தி அனுமதி கொடுக்க இருக்கிறது. அதன் பிறகு அந்த இடங்களில் வரும் 7.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கான இடங்களும் 2-வது சுற்று கலந்தாய்வில் நிரப்பப்படும்.மருத்துவப் படிப்புக்கான கட்டணங்களை அதிகமாக கல்வி நிறுவனங்கள் பெறுவதாக புகார்கள் வருகின்றன. கட்டண நிர்ணயம் செய்வதை மட்டுமே கல்வி நிறுவனங்கள் வசூலிக்க வேண்டும். தவறு செய்யும் கல்வி நிறுவனங் கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com