சேலம் - கொச்சி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப்படுமா? - எ.வ.வேலு பதில்


சேலம் - கொச்சி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப்படுமா? - எ.வ.வேலு பதில்
x
தினத்தந்தி 4 April 2025 12:24 PM IST (Updated: 4 April 2025 12:25 PM IST)
t-max-icont-min-icon

ரூ. 199 கோடி செலவில் எல் அண்ட் டி சாலையை அரசிடம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்ச்ர எ.வ.வேலு தெரிவித்தார்.

சென்னை,

தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய, சட்டமன்ற உறுப்பினர் கொங்கு ஈஸ்வரன், சேலம் - கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் எல் அண்ட் டி (பைபாஸ் சாலை) விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் எ.வ.வேலு, இந்த சாலையை விரிவாக்கம் செய்ய பல உறுப்பினர்கள் கேட்டுள்ளனர். இந்த சாலை தொடர்பாக எல் அண்ட் டி நிறுவனத்திடம் 2032வரை சாலை ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த சாலையில், 6 இடங்களில் எல் அண்ட் டி நிறுவனம் சுங்க கட்டணம் வசூலித்து வருகிறது.

இந்த சாலையை அரசுக்கு வழங்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டது. தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் எல் அண்ட் டி நிறுவனம் பணம் கேட்டுள்ளனர்.

199 கோடி ரூபாய் பணம் ஒன்றிய அரசிடம் இந்தவாரம் ஒப்படைத்ததும், சாலை பெறப்படும். அதன் பின் மத்திய அரசு தமிழக அரசிடம் வழங்கினால் நாம் பணிகளை தொடருவோம், இல்லையெனில் மத்திய அரசே பணி மேற்கொள்ள வலியுறுத்தப்படும் என்று பதில் அளித்தார்.

1 More update

Next Story