தென்காசி தோரணமலை கிரிவல பாதை அமைக்கப்படுமா? ; அமைச்சர் சேகர்பாபு பதில்

ஆலங்குளம் தொகுதி அ.தி.மு.க. உறுப்பினர் பால் மனோஜ் பாண்டியன் கேள்வி எழுப்பினார்.
சென்னை
சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரம் நடைபெற்று வருகிறது. இதில், உறுப்பினர்களில் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
அந்த வகையில், தென்காசி மாவட்டம் கடையம் அருகே தோரணமலை முருகன் கோவிலில், மலையை சுற்றி கிரிவல பாதை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா? தென்காசி ஆலங்குளம் தொகுதி அ.தி.மு.க. உறுப்பினர் பால் மனோஜ் பாண்டியன் கேள்வி எழுப்பினார்.
அந்த கேள்விக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்து கூறியதாவது, தோரணமலை முருகன் கோவில் நிர்வாகத்திடம் போதிய நிதி வசதி இல்லாததால் உபயதாரர்களை எதிர்நோக்கி காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. அடுத்த 3 மாதத்திற்குள் தோரணமலை கிரிவல பாதை பணிகள் தொடங்கும்' என்றார்.
Related Tags :
Next Story






