எழுத்து பிழையாக உள்ள ஊர் பெயர் பலகை மாற்றப்படுமா?

எழுத்து பிழையாக உள்ள ஊர் பெயர் பலகை மாற்றப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
எழுத்து பிழையாக உள்ள ஊர் பெயர் பலகை மாற்றப்படுமா?
Published on

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஒன்றியம், மலைக்கோவிலூர் அருகே வடுகநாகம்பள்ளி என்னும் ஊர் உள்ளது. இந்த ஊரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு பக்தர்கள் அதிகமாக வந்து செல்வார்கள். அரவக்குறிச்சி பகுதியில் இருந்து வரும் மக்கள் மலைக்கோவிலூர் வழியாக இந்த ஊருக்கு வந்து செல்வார்கள். சின்னதாராபுரம், க. பரமத்தி, கரூர் பகுதியில் இருந்து வரும் மக்கள் காசிபாளையம் அருகே வடுகநாகம்பள்ளி பிரிவு வழியாக அமராவதி ஆற்றைக் கடந்து இந்த கோவிலுக்கு செல்வார்கள்.

இந்தநிலையில் நெடுஞ்சாலை துறை சார்பில் காசிபாளையம் அருகே உள்ள வடுகநாகம்பள்ளி பிரிவில் ஊர் பெயர் பலகை வைத்துள்ளனர். இந்தப் பலகையில் வடுகனாபள்ளி என எழுத்து பிழையாக வைத்துள்ளனர். புதிதாக வழித்தடம் கேட்டு வரும் நபர்கள் இந்த பெயர் பலகையை பார்த்தால் வேறு ஒரு ஊர் என்று நினைத்து குழப்பம் அடைவார்கள். எனவே மாவட்ட நிர்வாகமும், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் உடனடியாக தலையிட்டு எழுத்து பிழையாக பெயரை சரியாக திருத்தம் செய்யவேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com