இடைத்தேர்தலில் விசிக போட்டியா? திருமாவளவன் பதில்

அமைச்சர் சரத்குமார் மீதான குற்றச்சாட்டு உண்மையாக இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருமாவளவன் கூறினார்.
இடைத்தேர்தலில் விசிக போட்டியா?  திருமாவளவன் பதில்
Published on

விசிக தலைவர் தொல் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க கரூருக்கு முதல்வர் விஜய் செல்வது அவசியமானது. இடைத்தேர்தல் எதிலும் நான் போட்டியிட போவது இல்லை என்று நான் முதல் நாளிலேயே சொல்லிவிட்டேன். ஊடகங்கள் யூகங்களாக இதனை பரப்புகிறார்கள். தவெகவிற்கு எந்த ஒரு அழுத்தத்தையும் நாங்கள் தரவில்லை. இலாகாவை மாற்றி தாருங்கள் என்றும் நாங்கள் கேட்கவில்லை. திருச்சி கிழக்கில் நாங்கள் போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கையையும் நாங்கள் வைக்கவில்லை.

ஊடகங்களாக பரப்புகிற ஊகங்களாவே இவை இருக்கின்றன. விசிக அப்படி எந்த ஒரு அழுத்தத்தையும், தவெகவிற்கு தரவில்லை. அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கூறி திமுக போராட்டம் நடத்தியது பற்றி கேட்கிறீர்கள். அந்த குற்றச்சாட்டு உண்மையாக இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் திமுக கூட்டணியில் இருந்து விசிக விலக இருப்பதாக செய்திகள் வெளியாவது பற்றி திருமாவளவனிடம் செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளிக்க திருமாவளவன் மறுத்துவிட்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com