

சென்னை,
வடகிழக்கு பருவமழை காலத்தில் தீபாவளி பண்டிகை வருவதால் ஒவ்வொரு ஆண்டும் அன்றைய தினம் மட்டும் மழை பெய்யக்கூடாது என்பது குழந்தைகள் மட்டுமின்றி முதியோர்களின் வேண்டுதலாகவும், விருப்பமாகவும் இருக்கும். ஏனென்றால் தீபாவளி அன்று மழை பெய்தால் பட்டாசு வெடிக்க முடியாமல் போய்விடும் என்ற கவலைதான் அதற்கு காரணம். ஆனால் அதற்கு ஏற்றார் போல் தீபாவளி பண்டிகை அன்று பொதுவாக பெரியளவில் மழை பெய்வது இல்லை.
இந்த ஆண்டு வங்க கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தீபாவளி பண்டிகை அன்று 4-ந்தேதி (வியாழக்கிழமை) மழை பெய்யுமா? என்ற கேள்விக்கு வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் ஆறுதலான பதிலை அளித்துள்ளார். அவர் கூறுகையில், தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பதற்கு ஏற்ப வானம் மேகமூட்டத்துடன் தான் காணப்படும். விட்டுவிட்டு லேசான மழை பெய்யக்கூடும். இது ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி அன்று வழக்கமாக இருப்பதுதான். என்றார்.