புதிய பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுமா?

புதிய பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதிய பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுமா?
Published on

தாயில்பட்டி, 

வெம்பக்கோட்டை அருகே உள்ள இ.மீனாட்சிபுரம் கிராமம் வெம்பக்கோட்டையிலிருந்து கழுகுமலை செல்லும் மெயின் ரோட்டில் அமைந்துள்ளது. இங்கு உள்ள பயணிகள் நிழற்குடை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இதனை பயன்படுத்த பயணிகள் அச்சப்படுகின்றனர். ஆகையால் உடனடியாக சேதமடைந்த நிழற்குடையை அகற்றிவிட்டு புதிய நிழற்குடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com