நெல்லை தொகுதியில் மீண்டும் போட்டியா? - நயினார் நாகேந்திரன் விளக்கம்

திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளில் எந்த தொகுதியிலும் போட்டியிடுவென் என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
நெல்லை தொகுதியில் மீண்டும் போட்டியா? - நயினார் நாகேந்திரன் விளக்கம்
Published on

நெல்லை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் பேசியதாவது:-

வருகிற சட்டப்பேரவை தேர்தலில் சாத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறீர்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த நயினர் நாகேந்திரன் நெல்லை தொகுதி மக்கள் 5 முறைசட்டப்பேரவை தேர்தலிலும், 1 முறை நாடாளுமன்ற தேர்தலிலும், சில நேரங்களில் நான் ஒட்டு கேட்காமல் இருந்த போது கூட 80ஆயிரம், 90ஆயிரம் ஓட்டுகளை எனக்கு அளித்துள்ளார்கள்.

இதற்கு முன்னால் கலைஞர் கூட குளித்தலை, திருவாரூர், அண்ணாநகர் தொகுதியில் மாறி போட்டியிட்டிருக்கிறார். இதற்காக நான் கலைஞரின் கூட என்னை ஒப்பீட்டு பார்க்கவில்லை. திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளில் எந்த தொகுதியிலும் போட்டியிடுவென் என்றார்.

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com