புதுக்கோட்டையில் சிறுத்தை நடமாட்டமா? - வனத்துறை விளக்கம்

சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை யாரும் பரப்பவேண்டாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் மழவராயன்பட்டி, மாஞ்சான்விடுதி பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தகவல்கள் பரவின. குறிப்பாக சமூக வலைதளங்களில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தகவல் பரவியது. இதனால் அப்பகுதியை சேர்ந்த மக்கள் அச்சத்துடனே வசித்து வந்தனர்.

இதையடுத்து மழவராயன்பட்டி, மாஞ்சான்விடுதி பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதா என வனத்துறையினர் சோதனை செய்தனர். வனத்துறையினர் 5 குழுக்களாக பிரிந்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர். வனத்துறையினரின் இந்த சோதனையில் சிறுத்தை நடமாட்டத்திற்கான தடயம் ஏதும் தென்படவில்லை.

குறிப்பிட்ட பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் ஏதும் இல்லை என கூறியுள்ள வனத்துறையினர், பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும், சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை யாரும் பரப்பவேண்டாம் எனவும் தெரிவித்துள்ளனர்.  

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com