தீபாவளியையொட்டி மழை இருக்குமா? - வானிலை ஆய்வாளர் விளக்கம்

தமிழகத்தின் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
தீபாவளியையொட்டி மழை இருக்குமா? - வானிலை ஆய்வாளர் விளக்கம்
Published on: 

சென்னை,

வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற்ற நிலையில் தமிழ்நாட்டில் மழை பரவலாக பெய்து கொண்டிருக்கிறது. ஓரிரு இடங்களில் அதி கனமழையும், சில இடங்களில் மிக கனமழையும், பல இடங்களில் கன மழையும் பெய்து வருகிறது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று (திங்கட்கிழமை) இரவு முதல் மழை படிப்படியாக குறையத் தொடங்கும். அந்த வகையில் வருகிற 31-ந்தேதி வரை வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் ஒரு சிறிய இடைவெளியை கொடுக்கிறது. பிறகு 31-ந்தேதியில் இருந்து மீண்டும் மழைக்கான சூழல் தொடங்குகிறது.

தீபாவளி பண்டிகையையொட்டிய வாரத்திலும், அதன் பிறகு அடுத்த மாதம் (நவம்பர்) 15-ந்தேதி வரையிலும் சீரான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், சில இடங்களில் கன மழைக்கான சூழல் உள்ளதாகவும் தனியார் வானிலை ஆய்வா ளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து அடுத்த மாதம் 15-ந்தேதியில் இருந்து 30-ந்தேதி வரை மழைக்கான நிகழ்வுகள் வருகிறது எனவும், அதில் புயலுக்கான வாய்ப்பு தமிழகத்துக்கு இருக்கிறது எனவும் சொல்லப்படுகிறது.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com