தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தவெக வருமா? எடப்பாடி பழனிசாமி பதில்

தனித்து போட்டியிடும் முடிவை கைவிட்டு பாஜகவுடன் தவெக கை கோர்க்க போகிறதா என்று அரசியல் வட்டாரத்தில் யூகங்கள் கிளம்பி வருகின்றன.
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தவெக வருமா? எடப்பாடி பழனிசாமி பதில்
Published on

தமிழக வெற்றிக்கழகம் வரும் தேர்தலில் தனித்தே போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாஜக அதிமுக இடம் பெற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய இருப்பதாக கடந்த சில தினங்களாக செய்திகள் வெளியாகி வருகின்றன. நேற்று முன் தினம் தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பெரும்பாலான நிர்வாகிகள் கூட்டணி அமைத்து போட்டியிட ஆதரவு தெரிவித்து இருப்பதாகவும் தகவல் பரவியது.

இதனால், தனித்து போட்டியிடும் முடிவை கைவிட்டு பாஜகவுடன் தவெக கை கோர்க்க போகிறதா என்று அரசியல் வட்டாரத்தில் யூகங்கள் கிளம்பி வருகின்றன. இந்த நிலையில், சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. தேசிய ஜனநாயாக கூட்டணிக்கு தவெக வருமா? என்று கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், தவெகவுடன் அதிமுக இதுவரை எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை” என்று தெரிவித்துள்ளர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com