விஜய் 2ம் இடம் வருவாரா.. ஜோதிமணி சொன்ன கருத்துக்கு திருமாவளவன் கொடுத்த பதில்

விஜய் 2ம் இடம் வருவாரா.. ஜோதிமணி சொன்ன கருத்துக்கு திருமாவளவன் கொடுத்த பதில்

சினிமா மயக்கம் மக்களை பாதிக்காது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
Published on

சென்னை,

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தி.மு.க.வில் ஒவ்வொரு கட்சியையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். எங்களை யும் விரைவில் அழைப்பார்கள். பேச்சுவார்த்தை சுமுகமான முறையில் நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சிகள் அதிர்ச்சி அடையும் அளவுக்கு தி.மு.க. கூட்டணி கட்டுக்கோப்பாக உள்ளது. நாளுக்குநாள் புதிய கட்சிகள் இணைந்து கூட்டணியை வலுப்படுத்தி வருகின்றன. தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு ஈடுகொடுக்கும் வகையில் மாற்று கூட்டணி எதுவும் உருவாகவில்லை. தமிழ்நாடு மக்களின் பேராதரவுடன் தி.மு.க. கூட்டணி தேர்தலில் மகத்தான வெற்றி பெறும்.

விஜய் 2-வது இடத்துக்கு வருவார் என்பது ஜோதிமணியின் கருத்து. அதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். தேர்தலுக்கு பிறகுதான் உண்மை நிலை தெரியும். விஜய் எவ்வளவு வாக்குகள் பெறுவார் என்பதை முன்கூட் டியே யூகத்தின் அடிப்படையில் கூற முடியாது. விஜய் புகழ்பெற்ற நடிகர் என்பதால் அவருக்கு முக்கியத்துவம் அளிக்கிறார்கள்.

விஜய்யால் தமிழ் நாடு அரசியல் தலைகீழாக மாறப்போகிறது என்ற மாயத்தோற்றத்தை சிலர் திட்டமிட்டு உருவாக்குகின்றனர். பிற மாநிலங்களைவிட தமிழ்நாடு மக்கள் அரசியல் விழிப்புணர்வு கொண்டவர்கள். கடந்த காலங்களில் சினிமா மயக்கத்தில் வாக்களித்தது போல தற்போதைய சூழலில் வாக்களிக்கும் வாய்ப்பு இல்லை. சினிமா மயக்கம் மக்களை பாதிக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com