

சென்னை,
தமிழக அமைச்சரவையில் புதிதாக 23 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கவர்னர் அர்லேகர் இன்று பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இருவர் அமைச்சர்களாக பதவியேற்றனர். முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் பட்டியலினத்தை சேர்ந்த 7 பேர் பதவியேற்றுள்ளனர்.
புதிதாக பதவி ஏற்றுள்ள அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்து கவர்னர் அர்லேகர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டார். இதன்படி முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் இதுவரை இடம்பெற்றுள்ள 33 பேருக்கும் துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இந்த சூழலில், தமிழக அமைச்சரவையில் சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை ஆகியவை இதுவரை யாருக்கும் ஒதுக்கப்படவில்லை. அமைச்சரவையில் இடம்பெறுவதாக சொல்லப்படும் ஐ.யு.எம்.எல்.-க்கு சிறுபான்மையினர் நலத்துறையும், வி.சி.க.வுக்கு ஆதிதிராவிடர் நலத்துறையும் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தமிழக அமைச்சரவையில் விசிக இடம் பெறுவது குறித்து இன்று மாலைக்குள் அறிவிக்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். மேலும் பெரும்பாலான நிர்வாகிகள் அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர் என்றும், உயர்மட்ட நிர்வாகிகளிடம் ஆலோசித்து சற்று நேரத்தில் அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.