பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுமா?

பிளவக்கல் பெரியாறு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுமா?
Published on

வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சியை அடிவார பகுதியில் பிளவக்கல் பெரியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணையானது 47 அடி முழு கொள்ளளவு கொண்டதாகும். இந்த அணையை நம்பி 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெற்று வருகிறது.

தற்போது பருவமழை சரியாக பெய்யாததால் இப்பகுதியில் உள்ள கண்மாய்கள் தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கின்றன. இதனால் கடந்த 2 ஆண்டுகளாக பெய்த தொடர் மழையினால் விவசாய நிலங்களில் உள்ள கிணறுகளில் உள்ள தண்ணீரை வைத்து இப்பகுதியில் உள்ள விவசாயிகள் விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மலையின் காரணமாக பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்து தற்போது 30 அடியாக உள்ளது.கிணற்று பாசனத்தை வைத்து தற்போது விவசாயிகள் விவசாய பணியினை மேற்கொண்டு வரும் சூழ்நிலையில் அணையின் நீர் இருப்பு 10 அடி மட்டும் வைத்துவிட்டு மீதமுள்ள தண்ணீரை விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பாசனத்திற்கு திறக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

பருவமழை சரியாக பெய்யாததால் கண்மாய்கள் வறண்டு கிடக்கின்றன. அணையில் இருந்து தண்ணீர் திறந்தால் கண்மாய்களுக்கு தண்ணீர் வரும். அந்த தண்ணீர் மூலம் பயிகளை காப்பாற்ற முடியும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுத்து தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com