மயிலாப்பூரில் போட்டியா? - தமிழிசை சவுந்தரராஜன் பதில்

மயிலாப்பூரில் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்ட தேர்தல் பிரசாரத்தில் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார்.
மயிலாப்பூரில் போட்டியா? - தமிழிசை சவுந்தரராஜன் பதில்
Published on

சென்னை,

சட்டமன்றத் தேர்தலில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடுகிறீர்களா? என்ற கேள்விக்கு தமிழிசை சவுந்தரராஜன் பதிலளித்துள்ளார்.

மயிலாப்பூர் தொகுதி அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படாத நிலையில், நேற்று மயிலாப்பூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்ட தேர்தல் பிரசாரத்தில் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார்.

Also Read
விடுபட்ட நபர்களுக்கு இறுதி வாய்ப்பு; வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாளை கடைசி நாள்
மயிலாப்பூரில் போட்டியா? - தமிழிசை சவுந்தரராஜன் பதில்

இதனால் அவர் அத்தொகுதியில் போட்டி இடுகிறாரா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், சட்டமன்றத் தேர்தலில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடுகிறீர்களா? என்ற கேள்விக்கு பாஜக தலைவர் தமிழிசை பதிலளித்துள்ளார். அதன்படி, அண்ணன் எடப்பாடி பழனிசாமி அழைத்ததன் பேரில் மயிலாப்பூர் பிரசாரத்தில் பங்கேற்றதாகவும், வேட்பாளர் பட்டியலை பாஜக தலைமை விரைவில் அறிவிக்கும் எனவும் கூறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com