சைக்கிள் சின்னத்தில் போட்டியிட விருப்பம்: அ.தி.மு.க. கூட்டணியில் 12 தொகுதிகளை எதிர்பார்க்கும் த.மா.கா.


சைக்கிள் சின்னத்தில் போட்டியிட விருப்பம்: அ.தி.மு.க. கூட்டணியில் 12 தொகுதிகளை எதிர்பார்க்கும் த.மா.கா.
x

த.மா.கா.வின் சின்னமான சைக்கிளில் போட்டியிட வேண்டும் என்றால் குறைந்தது 12 தொகுதிகள் தேவை.

சென்னை,

கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த த.மா.கா. 6 தொகுதிகளில் போட்டியிட்டது. ஒரு மேல்-சபை இடமும் வழங்கப்பட்டது. ஆனால், போட்டியிட்ட 6 இடங்களிலும் தோல்வியை தழுவியது. கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் மட்டும் எம்.பி. ஆனார்.

அப்போது, த.மா.கா. வேட்பாளர்கள் அனைவரும் அ.தி.மு.க. சின்னமான இரட்டை இலையில் போட்டியிட்டனர். இந்த நிலையில், த.மா.கா.வின் சின்னமான சைக்கிளில் போட்டியிட வேண்டும் என்றால் குறைந்தது 12 தொகுதிகள் தேவை. எனவே, இந்த முறை அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் 12 தொகுதிகளை த.மா.கா. எதிர்பார்க்கிறது.

சமீபத்தில் சேலத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த ஜி.கே.வாசன், இதே கோரிக்கையை வலியுறுத்தினார். ஆனால், எடப்பாடி பழனிசாமி மறுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், மும்பை மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்ட தமிழ் வேட்பாளரான ரவி ராஜாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய அங்கு சென்ற ஜி.கே.வாசன், தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயலை சந்தித்து பேசினார்.

அப்போது, தமிழக அரசியலில் விஜய் வருகை குறித்து பேசப்பட்டதாக தெரிகிறது. மேலும், த.மா.கா.வுக்கு 12 தொகுதிகள் வேண்டும் என்பதையும் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். பியூஸ் கோயலும் தமிழகம் வரும்போது அதுகுறித்து பேசலாம் என்று கூறிவிட்டதாக சொல்லப்படுகிறது.

1 More update

Next Story