கோவையில் திடீரென தீப்பிடித்து எரிந்த காற்றாலை

காற்றின் வேகத்தால் தீயானது காற்றாலையின் இறக்கைகளில் சூழ்ந்தது.
கோவையில் திடீரென தீப்பிடித்து எரிந்த காற்றாலை
Published on

கோவை,

கோவை மாவட்டம் செலக்கரிச்சல் பகுதியில் தனியார் காற்றாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் திடீரென காற்றாலையின் இயந்திரத்தில் இருந்து புகை வெளியேறியது. இதனையடுத்து சில நிமிடங்களிலேயே தீ பற்றி எரிய தொடங்கியது. காற்றின் வேகத்தால் தீயானது காற்றாலையின் இறக்கைகளில் சூழ்ந்தது.

இந்த விபத்தை பார்த்த அப்பகுதி வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனை அங்கிருந்த பலர் தனது செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பரப்பினர். இதனிடையே விபத்து தொடர்பாக தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். நீண்ட போராட்டத்திற்கு பின்னர் தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் எவ்வாறு தீ ஏற்பட்டது என விசாரித்து வருகின்றனர். கோவையில் திடீரென காற்றாலை தீப்பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com