நல்லம்பள்ளி அருகேபெண்களுக்கு இடையூறாக இருந்த டாஸ்மாக் கடை இடமாற்றம்

நல்லம்பள்ளி அருகேபெண்களுக்கு இடையூறாக இருந்த டாஸ்மாக் கடை இடமாற்றம்
Published on

நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி அருகே வடக்கு தெரு கொட்டாவூர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் அரசு பள்ளிக்கூடம் உள்ளன. இங்கு டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த கடைக்கு வரும் மதுப்பிரியர்கள் மதுவை குடித்துவிட்டு கிராம பெண்களிடம் ரகளை செய்வது உள்ளிட்ட சட்டவிரோத செயல்கள் நடந்து வந்தன. இதனால் பெண்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அச்சத்தில் இருந்து வந்தனர்.

இவ்வாறு கிராம மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் இருந்த டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யக்கோரி மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் சென்றது.

இதையடுத்து சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையை நல்லம்பள்ளி அருகே உள்ள டாடா நகருக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இதனால் வடக்கு தெரு கொட்டாவூர் கிராமத்தை சேர்ந்த பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com