நடிகர் அஜித்குமார் அணி பல வெற்றிகளை குவிக்க வாழ்த்துகள்: நயினார் நாகேந்திரன்

கார் பந்தயத்தில் வெற்றி பெற்ற நடிகர் அஜித்குமாருக்கு நயினார் நாகேந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் அஜித்குமார் அணி பல வெற்றிகளை குவிக்க வாழ்த்துகள்: நயினார் நாகேந்திரன்
Published on

சென்னை,

சினிமா தாண்டி கார் பந்தயத்திலும் கலக்கி வரும் நடிகர் அஜித்குமார், சமீபத்தில் ஸ்பெயினில் நடந்த 24 மணி நேர கார் பந்தயத்தில் 3-வது இடம் பிடித்தார். இதையொட்டி, அஜித்குமார் அணிக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், 3-வது இடம் பிடித்த நடிகர் அஜித்குமாருக்கு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், சர்வதேச அளவிலான கார் பந்தயங்களில் களமிறங்கி, பல வெற்றிகளை குவித்து வரும் நடிகர் அஜித்குமாரின் Ajith Kumar Racing Team அணி, 2025 ஆம் ஆண்டிற்கான Creventic 24H European Endurance Championship தொடரில் ஒட்டுமொத்தமாக 3 ஆம் இடம் பிடித்து, நம் தேசத்துக்கு பெருமை சேர்த்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்த வெற்றியின் மூலம், நம் பாரத நாடு மட்டுமன்றி, நம் தமிழ்நாட்டின் பெருமையையும் உலகறியச் செய்திருக்கிறார் அஜித் குமார். மென்மேலும் அவரது அணி பல வெற்றிகளை குவிக்க எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com