

சென்னை,
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதையடுத்து பல்வேறு தளர்வுகளுடன் இதுவரை 5 முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
ஊரடங்கு அமலில் இருப்பினும் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டே அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கட்டுக்குள் இருந்த கடந்த சில் மாதங்களாக கொரோனா மீண்டும் வீரியம் பெற தொடங்கி உள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி காணொலி மூலம் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த ஆலோசனையில் மாவட்ட வாரியான கொரோனா பரவல் நிலவரம்? சிசிச்சை விவரங்கள்? ஊரடங்கில் நீட்டிப்பதா ,கட்டுப்பாடு, தளர்வுகள் குறித்து முதலமைச்சர் ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் சென்னையில் கூடுதல் தளர்வுகள் வழங்குவது தொடர்பாகவும், தொழில் நிறுவனங்களுக்கு கூடுதல் தளர்வுகள் வழங்குவது தொடர்பாகவும் முதலமைச்சர் ஆலோசனை நடத்துகிறார்.
பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் கட்டுப்பாடுகள் அதிகம் விதிக்க வாய்ப்பு இருப்பதாகவும், சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாகவும் முடிவெடுக்கப்பட வாய்ப்பு உள்ளாதகவும் எதிர்பார்க்கப்படுகிறது.