ரஜினிகாந்துடன் ஏ.சி.சண்முகம், கராத்தே தியாகராஜன் சந்திப்பு

ரஜினிகாந்தை ஏ.சி.சண்முகம், கராத்தே தியாகராஜன் நேற்று திடீரென்று சந்தித்தனர். அப்போது அரசியல் நிலவரம் குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ரஜினிகாந்துடன் ஏ.சி.சண்முகம், கராத்தே தியாகராஜன் சந்திப்பு
Published on

சென்னை,

தூத்துக்குடி கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நடிகர் ரஜினிகாந்த் கடந்த 30-ந்தேதி நேரில் சந்தித்து பேசினார். பின்னர் நிருபர்களிடம் பேசும்போது, இந்த கலவரத்துக்கு சமூக விரோதிகளே காரணம் என்று குறிப்பிட்டார். இந்த கருத்தை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் விமர்சித்து எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.

இந்த சூழ்நிலையில் போயஸ்கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டுக்கு புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் நேற்று காலை 9.50 மணிக்கு வந்தார். உள்ளே சென்ற அவர் ரஜினிகாந்துடன் ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பில் அரசியல் நிகழ்வுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 40 நிமிடம் ஆலோசனை நடத்திய ஏ.சி.சண்முகம், காலை 10.30 மணிக்கு வெளியே வந்தார்.

இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், தூத்துக்குடி கலவரத்தில் சமூகவிரோதிகள் ஊடுருவி இருந்தார்கள் என்று ரஜினிகாந்த் சொன்ன அத்தனையும் உண்மை. தூத்துக்குடி சென்று கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்துவிட்டு வந்த பிறகு, அவருக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் எதார்த்தமான உண்மைகளை வெளிப்படுத்தினார். ரஜினிகாந்த் மீதான அச்ச உணர்வு காரணமாகவே மற்ற கட்சியினர் அவரை விமர்சனம் செய்கின்றனர் என்றார்.

அதைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் தென்சென்னை மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன், ரஜினிகாந்தை பிற்பகல் 12.10 மணியளவில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போதும் அரசியல் நிலவரம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக பேசப்படுகிறது. சுமார் 35 நிமிடம் இந்த ஆலோசனை நீடித்தது. ஆலோசனை முடிந்ததும் பிற்பகல் 12.45 மணிக்கு வெளியே வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அதைத்தொடர்ந்து அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு கராத்தே தியாகராஜன் அளித்த பதில்களும் வருமாறு:-

அதேபோல், 2014-ம் ஆண்டு குன்ஹா வழங்கிய தீர்ப்பில் 28 நாட்கள் ஜெயிலில் இருந்துவிட்டு பெயிலில் ஜெயலலிதா வெளியே வந்த போது, மரியாதைக்குரிய ஜெயலலிதா நீங்கள் போயஸ்கார்டன் திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது. உங்களுக்கு நல்ல நேரம் அமைய வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். உங்களுக்கு நல்ல உடல்நிலையோடு, அமைதியும் இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்று ஒரு கடிதம் எழுதி இருந்தார். அதை ஜெயலலிதா தன்னுடைய கட்சி லெட்டர் பேடில் குறிப்பிட்டு வெ

ளியிட்டார். அந்த அளவுக்கு பெரிய தலைவர்களுக்கு ரஜினிகாந்தின் ஆளுமை தெரிந்து இருந்தது. வரும் தேர்தலில் ஸ்டாலின் தலைமையில் ஒரு அணியும், ரஜினிகாந்த் தலைமையில் ஒரு அணியும் தயாராகும் என்று நினைக்கிறேன்.

இவ்வாறு அவர் பதிலளித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com