

சென்னை
அரசாணைப்படி கூடுதல் ஊதியத்தை உயர்த்தி வழங்குதல் உள்பட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவர்கள் கடந்த 23-ந்தேதி வரை போராட்டம் நடத்தி வருகிறார்கள். போராட்டம் நடத்தி வரும் அரசு மருத்துவர்களுடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நடத்திய முதல்கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது.
அரசு மருத்துவர்களுடன் இன்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நடத்திய பேச்சுவார்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. மருத்துவ சங்கத்துடன் அரசு நடத்தும் பேச்சுவார்த்தையில் இழுபறி. நீண்ட நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.