மாலை போட்டு கழுத்தை அறுப்பார்கள்: “இந்த தேர்தலுடன் பதவி சுகத்தை தி.மு.க. மறந்து விடவேண்டும்” டாக்டர் ராமதாஸ் கடும் தாக்கு

இந்த தேர்தலுடன் பதவி சுகத்தை தி.மு.க. மறந்து விட வேண்டும் என்று திண்டுக்கல்லில் நடந்த பொதுக்கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசினார்.
மாலை போட்டு கழுத்தை அறுப்பார்கள்: “இந்த தேர்தலுடன் பதவி சுகத்தை தி.மு.க. மறந்து விடவேண்டும்” டாக்டர் ராமதாஸ் கடும் தாக்கு
Published on

திண்டுக்கல்,

அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகள் சார்பில், திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசியதாவது:-

தமிழகம், புதுச்சேரியில் நமது கூட்டணி 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும், 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் மகத்தான வெற்றியை பெறும்.

அ.தி.மு.க. தொண்டர்கள் உண்மையாக உழைப்பவர்கள். நமது கூட்டணி இயற்கையாக அமைந்த கூட்டணி ஆகும். ஆனால், எதிர் அணியில் சூது இருக்கும். அவர்கள் மாலை போட்டு கழுத்தை அறுப்பார்கள். ஜெயலலிதா இருந்த போது அ.தி.மு.க.வுடன், முதல் முறையாக கூட்டணி அமைத்தோம். அது மாபெரும் வெற்றியை பெற்றது. தற்போது 3-வது முறையாக கூட்டணி அமைத்துள்ளோம். இந்த கூட்டணி மெகா கூட்டணி, வெற்றிக் கூட்டணி ஆகும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com