திருமணமான 10 மாதத்தில் தூக்குப்போட்டு புதுப்பெண் தற்கொலை

திருமணமான 10 மாதத்தில் தூக்குப்போட்டு புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார்
திருமணமான 10 மாதத்தில் தூக்குப்போட்டு புதுப்பெண் தற்கொலை
Published on

வில்லியனூர்

வில்லியனூர் அருகே உள்ள கூடப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ரகு. இவரது மனைவி சந்தியா (20). இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆனது. இந்தநிலையில் சந்தியா வீட்டில் தூக்குப்பேட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வில்லியனூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணம் முடிந்து 10 மாதங்களே ஆவதால் வருவாய்த்துறை விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com