24 மணி நேரத்தில் பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் -சென்னை வானிலை மையம்

24 மணி நேரத்தில் பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவி வருவதாக சென்னை வானிலை மையம் கூறி உள்ளது.
24 மணி நேரத்தில் பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் -சென்னை வானிலை மையம்
Published on

சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அவர் கூறியதாவது:-

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதக மான அறிகுறிகள் நிலவி வருகின்றன. அதனால் அடுத்த 24 மணி நேரத்தில் பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது. தற்போது கடலோர பகுதியில் தொடங்கிய மழை மற்ற பகுதியிலும் மிதமாக பெய்யக் கூடும். கடலில் இருந்து ஈரப்பதத் துடன் காற்று வீசி வருகிறது.

இதைத் தொடர்ந்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யும். 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும். சென்னையில் இடைவெளி விட்டு மழை பெய்யக்கூடும்.

அடுத்த 24 மணி நேரத்தில் பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுவதால் தமிழகத்தில் 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com