"உழைப்பு இன்றேல் உயிர் இல்லை உயர்வில்லை"- கமல்ஹாசன் மே தின வாழ்த்து

கமல்ஹாசன் தொழிலாளர்களுக்கு மே தின வாழ்த்து தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
"உழைப்பு இன்றேல் உயிர் இல்லை உயர்வில்லை"- கமல்ஹாசன் மே தின வாழ்த்து
Published on

சென்னை,

உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்களின் பங்களிப்புகள் மற்றும் சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாகவும், தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் வாய்ப்புகளை மேம்படுத்தும் விதமாகவும் ஆண்டுதோறும் மே 1-ம் தேதியன்று சர்வதேச தொழிலாளர் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், இன்று தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தொழிலாளர்களுக்கு மே தின வாழ்த்து தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது,

"காடு திருத்தி நாடாக்கியது உழைப்பு

உண்ணத் தந்து உயிர்கொடுப்பது உழைப்பு

உலக மாந்தரை ஒன்றாக்கியது உழைப்பு

உழைப்பு இன்றேல் உயிர் இல்லை உயர்வில்லை

உழைப்பையே மூச்சாய்க்கொண்ட உழைப்பாளர்க்கு என் வணக்கம்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com